தமிழகத்தில் அதிக அளவு மழை பெய்யக்கூடிய மாவட்டங்கள்

மனித வாழ்விற்கு மழை என்பது ஒரு முக்கிய தேவையாக இருந்து வருகிறது. அதில் நாம் தமிழ்நாட்டில் அதிக அளவு மழை பெய்யக்கூடிய மாவட்டங்களை பற்றி இந்த பதிவில் தெளிவாக காண்போம்! 

தமிழ்நாட்டில் அதிக மழை பெறும் மாவட்டங்களாக பருவ மழை மற்றும் புவியின் அமைப்பை பொறுத்து மாறுபட்டுக் கொண்டே தான் இருக்கின்றன. இதில் நாம் தென்மேற்கு பருவக்காற்று மற்றும் வடகிழக்கு பருவக்காற்று பொறுத்து மழை எந்தெந்த மாவட்டங்களில் எப்பொழுது பெய்கிறது என்பதை பற்றி பார்ப்போம்! 

தென்மேற்கு பருவ மழை: 

தென்மேற்கு பருவமழை என்பது ஜூன் முதல் செப்டம்பர் மாதம் வரை வரக்கூடிய மழைக்காலமாகும். இந்த தென்மேற்கு பருவக்காற்று பொருத்து அதிக மழை பெய்யக் கூடிய மாவட்டங்களை பார்ப்போம்..

நீலகிரி மாவட்டம் கோயம்புத்தூர் மாவட்டம் தென்காசி மாவட்டம் மற்றும் கன்னியாகுமரி மாவட்டம் போன்ற பகுதிகளில் அதிக அளவு தென்மேற்கு பருவக்காற்றின் போது அதிக அளவு மழை பெய்கிறது. மேலும் இந்த மாவட்டங்களில் அதிக அளவு மழை பெய்யக் கூடிய சில பகுதிகள் இருக்கின்றன. 

நீலகிரி மாவட்டத்தில் தெவல்லா மற்றும் வால்பாறை அருகே உள்ள சின்ன கல்லாறு போன்ற பகுதிகளில் அதிக அளவு தென்மேற்கு பருவக்காற்று மழை பெய்து வருகிறது. இந்த இடங்களில் சுமார் 4000 முதல் 5000 மில்லி மீட்டர் வரை மழையின் அளவு இருக்கின்றன.


வடகிழக்கு பருவக்காற்று: 

  • வடகிழக்கு பருவக்காற்று என்பது அக்டோபர் முதல் டிசம்பர் மாதம் வரை மழை பெய்யக்கூடிய பருவ காலங்களாகும். 
  • வடகிழக்கு பருவக்காற்று என்பது அதிக அளவு மழை பெய்ய கடிய மாவட்டங்கள் நெல்லை மாவட்டம் தர்மபுரி கிருஷ்ணகிரி திருப்பத்தூர் சேலம் மற்றும் விழுப்புரம் போன்ற மாவட்டங்களில் அதிக அளவு வடகிழக்கு பருவகாட்டின் போது மழையின் அளவு அதிகமாக இருக்கின்றன.
  • உதாரணமாக 2024 ஆம் ஆண்டின் போது நெல்லை மாவட்டத்தில் இயல்பை விட 100 சதவீதம் மழை அதிகமாகி உள்ளது.

மேலும் சில சிறப்பு தகவல்கள்: 

  • பருவ மழை என்பது இந்தியாவில் பருவநிலை அமைப்பில் ஒரு முக்கியமாக இருந்து வருகிறது. நமது தமிழ்நாட்டில் பருவமழை ஆனது இரண்டு வகைகளாக இருக்கிறது.
  • தென்மேற்கு பருவ மழை மற்றும் வடகிழக்கு பருவமழை என்று இரண்டு வகைகளாக இருக்கிறது. இந்த இரண்டு பருவ மழைகளும் எப்படி உருவாகிறது எங்கிருந்து வருகிறது என்பதை பற்றி இந்த பதிவில் நாம் விரிவாக பார்ப்போம். 

தென்மேற்கு பருவமழை: 

  • தென்மேற்கு பருவ மழையானது ஜூன் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை பெய்து வரக்கூடிய பருவ மழை தான் தென்மேற்கு பருவ மழையாகும்.
  • மேலும் தென்மேற்கு பருவமழை ஆனது அரபிக் கடலில் இருந்து உருவாகி மேற்கு தொடர்ச்சி மலையின் வழியாக நமது தமிழ்நாட்டிற்கு அதிக அளவு மழை கொடுக்கிறது.
  • இந்த தென்மேற்கு பருவமழை ஆனது முதலில் அரபிக் கடலில் இரந்து தென்மேற்கு நோக்கி காற்று வீசுகிறது இந்த மழையானது முதன் முதலில் கேரளாவில் இருந்து ஆரம்பிக்கிறது.
  • மேலும் இந்த மழை எனது மேற்கு தொடர்ச்சி மலையின் வழியாக இருக்கும் நீலகிரி கோயம்புத்தூர் மற்றும் வால்பாறை போன்ற இடங்களில் அதிக அளவு மழை பெய்கிறது.
  • இந்த தென்மேற்கு பருவ மழையின் மூலம் பெரும்பாலும் தேயிலைத் தோட்டங்கள் காப்பி மற்றும் மிளகு தோட்டங்கள் வளர்ச்சிக்கு இந்த மழை எனது உதவியாக இருக்கிறது. 
  • மேலும் பெரும்பாலான நேரங்களில் அதிக அளவு மழை பெறுவதன் மூலம் நீர் தேங்கி இந்த தாவரங்கள் அழிவிற்கும் காரணமாக இருக்கிறது. முக்கியமாக நீலகிரி வால்பாறை போன்ற இடங்களில் இருக்கின்றன.
  • கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மலைப்பகுதிகளுக்கு பெருமளவில் தென்மேற்கு பருவமழை ஆனது அதிகளவு கொடுக்கிறது. 

வடகிழக்கு பருவமழை: 

  • இந்த வடகிழக்கு பருவமழை ஆனது அக்டோபர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை வரக்கூடிய பருவ மழையாகும். 
  • மேலும் இந்த வடகிழக்கு பருவ மழையானது வங்காள விரிகுடா மற்றும் கிழக்கு கடற்கரை பகுதியில் இருந்து இந்த மழையானது ஆரம்பிக்கிறது.
  • வடகிழக்கு பருவ மழையானது சென்னை கடலூர் தென்காசி மற்றும் நாகப்பட்டினம் போன்ற கடலோர மாவட்டங்களுக்கு அதிக அளவு மழையை தருகிறது.
  • மேலும் இந்த வடகிழக்கு பருவமழை ஆனது உருவாகும் திசை வடகிழக்கிலிருந்து தெற்கு நோக்கி இந்த இந்தப் பருவ மழையானது ஆரம்பிக்கிறது.

வடகிழக்கு பருவக்காற்று உருவாவதற்கான முக்கிய காரணம்: 

  • இந்தப் புருவியின் வட அரைக்கோளத்தில் குளிர்காலம் தொடங்கும் பொழுது காற்றானது தெற்கு நோக்கி வீசுகின்றது.
  • இதன் மூலம் வங்காள விரிகுடா கடலில் ஈரப்பதம் உருவாகி மேகங்கள் உருவாகின்றன.இதன் மூலமாக மழை பெய்கிறது.
  • மேலும் இந்த வடகிழக்கு பருவ மழையானது 60% மழை இந்த பருவத்தில் மட்டுமே நமக்கு கிடைக்கிறது.
  • மேலும் இந்த வடகிழக்கு பருவ மழையானது அதிகளவு பெய்வதன் மூலமாக நெல் வகைகள் கரும்பு வகைகள் மற்றும் சில காய்கறி வகைகள் போன்ற தாவரங்களுக்கு பெருமளவு சேதத்தை ஏற்படுத்துகிறது. 
  • இதில் முக்கிய மாவட்டங்களாக நாகப்பட்டினம் தஞ்சாவூர் தென்காசி போன்ற மாவட்டங்கள் அடங்கும்.

Post a Comment

Previous Post Next Post